நாஞ்சில் நாடனுக்கு கலைமாமணி

 தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் விருது பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 இதேபோன்று, திரைத்துறையில் நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, மாளவிகா ஆகியோரும் விருது பெறுகின்றனர்.
 கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது.
 விருதுபெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
 அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
  2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட்டியம்), காயத்ரி சங்கரன் (கர்நாடக இசை), வே. நாராயணப் பெருமாள் (கர்நாடக இசை), எம்.வி. சண்முகம் (இசைக் கலைஞர்), இளசை சுந்தரம் (இயற்றமிழ் கலைஞர்), பி. லெட்சுமி நரசிம்மன் (தவில் கலைஞர்), திருமாந்திரை காளிதாஸ், (நாதஸ்வரக் கலைஞர்), பிரேமா ஜெகதீசன் (நாட்டியம்), ரோபோ சங்கர் (சின்னத்திரை கலைஞர்), நாமக்கல் வேணுகோபால் (கிளாரிநெட்), திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்), கவிக்கொண்டல் செங்குட்டுவன் (இயற்றமிழ் கலைஞர்), ச. சுஜாதா (நாட்டியம்) ராணி மைந்தன் (இயற்றமிழ் கலைஞர்), ஜி.கே. இராமஜெயம் (ஓவியக் கலைஞர்) கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் (இயற்றமிழ் கலைஞர்), தஞ்சை சுபாஷினி, ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்), சி.வி. ரமேஸ்வர சர்மா (சமையல் கலைஞர்), திருமுருகன் (சின்னத்திரை இயக்குநர்), பரத்வாஜ் (இசையமைப்பாளர்), ராஜீவ் மேனன் (ஒளிப்பதிவாளர்), சிற்பி குட்டப்பன் நாயர் (சிற்பக் கலைஞர்), தோஹா பேங்க் சீதாராமன் (பண்பாட்டுக் கலை பரப்புனர்), என். எதிராசன் (கலைப் பரப்புனர்), கருணாஸ் (நகைச்சுவை நடிகர்).
 2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை), சேக்கிழார் (சின்னத்திரை வசனகர்த்தா), சாக்ஷி சிவா (சின்னத்திரை நடிகர்), மாளவிகா (சின்னத்திரை நடிகை), பூவிலங்கு மோகன் (சின்னத்திரை நடிகர்), எஸ். முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்), பி. முருகேஸ்வரி (கரகாட்டக் கலைஞர்), ரேவதி சங்கரன் (சின்னத்திரை நடிகை), தஞ்சை சின்னப்பொன்னு குமார் (கிராமியப் பாடகர்), எல். ஜான்பாவா (சிலம்பாட்டக் கலைஞர்), ரேவதி (வில்லுப்பாட்டுக் கலைஞர்), கே. கருப்பண்ணன் (ஒயிலாட்டக் கலைஞர்), கே.ஏ. பாண்டியன் (நையாண்டிமேளக் கலைஞர்), எம். திருச்செல்வம் (நையாண்டிமேளக் கலைஞர்), சிவகங்கை வி. நாகு (நையாண்டிமேளக் கலைஞர்), டி. சேகர் (கிராமியக் கருவி இசைக் கலைஞர்), மு. இளங்கோவன் (கிராமியக் கலை பயிற்றுனர்), சா. கந்தசாமி (இயற்றமிழ்), ராஜேஷ் குமார் (இயற்றமிழ்), நாஞ்சில் நாடன் (இயற்றமிழ்), ரோகிணி (குணச் சித்திர நடிகை), சரண்யா (குணச் சித்திர நடிகை), சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்).
 2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்), பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ. லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன் (சமயச் சொற்பொழிவாளர்), தேச. மங்கையர்க்கரசி (சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபாலகிருஷ்ணன் (இசை ஆசிரியர்), கே. என். சசிகிரண் (குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத் (வயலின் கலைஞர்), ஐ. சிவக்குமார் (மிருதங்க ஆசிரியர்), என்.எஸ். ராஜம் (மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன் (வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா (வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன் (புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம் (புல்லாங்குழல்), டாக்டர் தி. சுரேஷ் சிவன் (தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன் (மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன் (நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம் (தவில் கலைஞர்), ஏ.ஹேம்நாத் (பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி (நாடகக் கலைஞர்), எப். சூசை மாணிக்கம் (நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை).
 விருது வழங்கும் விழா: கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சின்னத்திரை விருதுகளும் – பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் அன்றைய விழாவில் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நாஞ்சில் நாடனுக்கு கலைமாமணி

 1. manimuthu.s சொல்கிறார்:

  நாஞ்சிலாருக்கு பாராட்டுகள் குவியட்டும். வாழ்த்துக்கள்.

 2. Karthik சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 3. Surendran சொல்கிறார்:

  கலைமாமணி திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு என் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

 4. ravi சொல்கிறார்:

  Charu Nivedita
  அருமை நண்பர் நாஞ்சில் நாடனுக்கும் அனுஷ்காவுக்கும் தமன்னாவுக்கும் கலைமாமணி விருது கிடைத்திருக்கிறது. இதே காமெடி விருது இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப் பட்டபோது ‘சினிமா நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் இந்த விருதை வாங்க மாட்டேன்’ என்று சொல்லியே மறுத்து விட்டார். அதே மரபை நாஞ்சில் நாடனும் பின்பற்றுவார் எனக்கு நன்கு தெரியும். மேலும், திராவிட கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர்.

  என்று Charu Nivedita அவர் facebook-ல் கூறியுள்ளார்

 5. SiSulthan சொல்கிறார்:

  கலைமாமணி விருது இயல், இசை நாடக துறையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை ”இயற்றமிழ் கலைமாமணி” என்று விரிவான பார்வையில் பார்த்தால் அவர் விருதை வாங்குவதா கூடாதா என்பதை கீழ்கண்டவர்களுடந்தான் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
  2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: கவிக்கொண்டல் செங்குட்டுவன் (இயற்றமிழ் கலைஞர்), ராணி மைந்தன் (இயற்றமிழ் கலைஞர்), கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் (இயற்றமிழ் கலைஞர்),
  2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: சா. கந்தசாமி (இயற்றமிழ்), ராஜேஷ் குமார் (இயற்றமிழ்), நாஞ்சில் நாடன் (இயற்றமிழ்),
  2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்: பொன். செல்வ கணபதி (இயற்றமிழ்), பேராசிரியர் தே. ஞான சேகரன் (இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல் (இயற்றமிழ்),
  இல்லாமல் நாட்டியம், கர்நாடக இசை கலைஞர், இசைக் கலைஞர், நாதஸ்வரக் கலைஞர், சின்னத்திரை கலைஞர்,கிளாரிநெட் கலைஞர் ,ஓவியக் கலைஞர், சமையல் கலைஞர், சின்னத்திரை இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர், பண்பாட்டுக் கலை பரப்புனர், நகைச்சுவை நடிகர், கிராமியப் பாடகர், சிலம்பாட்டக் கலைஞர், ஒயிலாட்டக் கலைஞர், கூத்துக் கலைஞர், நாடகக் கலைஞர், இலக்கியச் சொற்பொழிவாளர், சமயச் சொற்பொழிவாளர், இசை ஆசிரியர், குரலிசைக் கலைஞர், வயலின் கலைஞர், மிருதங்க ஆசிரியர், மிருதங்க கலைஞர், வீணை கலைஞர், புல்லாங்குழல், தேவார இசைக் கலைஞர், மெல்லிசைப் பாடகி, தவில் கலைஞர், பரத நாட்டியம், நாடக நடிகர், திரைப்பட நடிகர், திரைப்பட நடிகை, முதலியவர்களுடன் நாம் ஒப்பிடுவது என்ன நியாயம்?
  அதுவும் இவைகளும் ஒன்றா ???????
  இயல், இசை, நாடகம் என்பதில் நாடகம் என்பது சின்னத்திரையும், திரைப்படமும் அடங்குமல்லவா? அந்த துறைகளுக்கு பரிசு வழங்குவதிலும் என்ன தவறு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s