கும்பமுனியின் மறுபக்கம்
”கும்பமுனியின் நனவோடை”
நாஞ்சில் நாடனின் கான் சாகிப் சிறுகதை தொகுப்பிலிருந்து
முழு கதையும் ”கான் சாகிப்” சிறுகதை தொகுப்பு
கிடைக்குமிடம்:
தமிழினி பதிப்பகம், உடுமலை.காம், விஜயா பதிப்பகம்,
கும்பமுனி சிறுகதைகள்
(1) https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/
(2) https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியும்தேசியவிரு/
(3) https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியின்விழா/
இந்த கும்பமுனி முற்றிலும் புதிய மனிதர். சாலாச்சிக்கும் சுசீலாவுக்கும் இடையே ஒரு சரடு. சாலாச்சிக்கும் ‘என்பிலதனை வெயில்காயும்’ நாவலில் வில்வண்டியில் கல்லூரி வருபவளுக்கும் நடுவே இன்னொரு சரடு. ஒரு தறி போல நெய்யப்பட்ட கதை. கற்பனைதான். ஆனால் கற்பனை என்பதுதான் என்ன?
வாசிக்கும் நம்மை, நாகர்கோயில், மார்த்தாண்டம், வில்லுக்குறி, திருவட்டார் பகுதிகளுக்கே கொண்டு செல்கிறார் நாஞ்சில் நாடன்.
அவர் சாயாக் கடையை எழுத்தில் எழுதுகிறார். வாசிக்கும் நம் கண் முன்னேயே நாஞ்சில் நாட்டு சாயாக் கடையின் படம் விரிகிறது.
////பாவி..எனக்குப் பொண்டிருந்து எனக்குப் பிள்ளைப் பெத்து மனம் நெறஞ்சு போயிருக்கணும்..தாய்ளி நானாவது கூட்டிட்டு எங்கயாம் ஓடீருக்கணும்..///
எப்போதும் சிரித்துக் கண்ணை நிறைய வைத்த கும்பமுனி அழுது கண்ணை நிறைய வைத்த வரிகள்…
ithu kumbamni kathaiilla..en kathai. ippam aza mattum than mudiuthu
காட்சிகளையும் சம்பவங்களையும் மீறி மனிதர்களின் கதைகளும் தீராமல் ஒலித்துக்கொண்டிருக்கும் உரையாடல்களும் மௌனமாக்குகின்றன. வாழ்த்துகள் நண்பரே
தவசிப்பிள்ளையைப் போல் நானும் மொழியற்று உருகி நிற்க வேண்டியதுதான். படித்து முடித்துததும் மனம் மிகவும் இளகிவிட்டது.