சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க!

தமிழ் பேப்பர்

பத்ரி சேஷாத்ரி

அரங்கில் நுழைந்து நேராக நான் சென்றது தமிழினி ஸ்டாலுக்கு.
வசந்தகுமாரிடம் சிறிது நேரம் பேசினேன்.
சூடிய பூ சூடற்க மற்றும் பொதுவாக நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன்.
நன்றாக விற்கின்றன என்றார்.
சூடிய பூ சூடற்க மொத்தம் 3,000 பிரதிகள் புதிதாக அடித்தாராம். இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே முழுவதும் விற்றுவிடும் என்று தெரிகிறது.
 சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரின் புத்தகங்களை மக்கள் கேட்டு வாங்கிச்செல்வது மகிழ்ச்சியைத் தருகிறது என்றேன்.
அப்படி ஒன்றுமில்லை;     நாஞ்சில் நாடன் என்பதால்தான் இது என்றார்.
நாஞ்சில் பற்றி பல பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேட்டிகள் வந்தன;     
 ஆனந்த விகடனில்   எழுதுகிறார்;                                                                                                                                                                                 மேலும் அவருக்கு யாருடனும் சண்டைஇல்லை;                                                                                        எனவே அவரை அனைவருமே பாராட்டியுள்ளனர் என்றார்.
பிற சாகித்ய அகாதெமி விருதுகளைப் பொருத்தமட்டில், ஒன்று அது தரமானவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை;
அல்லது தரமுள்ள ஆளாக இருந்தால் அவருக்கோ பலருடன் சண்டையிருக்கும் என்பதால் அவர் பற்றிய செய்திகள் சரியாக வெளிவராது என்றார்.
 உண்மைதான்.
எந்த விதத்தில் பார்த்தாலும், இம்முறை சாகித்ய அகாதெமி விருது, வணிகரீதியிலும் உதவியுள்ளது;
பலரை, அவரது புத்தகத்தைத் தேடிவந்து வாங்கச் செய்துள்ளது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதே நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நம்புவோம்.

http://www.tamilpaper.net/?p=2199

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க!

 1. ramji_yahoo சொல்கிறார்:

  அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

 2. J.Subramonian சொல்கிறார்:

  நாஞ்சில் சண்டைக்காரர்தான் சமுக இழிவுகளுக்கு எதிராக, மரத்துப்போன மனநிலைகொண்டவர்களுக்கு எதிராக கடும் சண்டைபோட்டு கொண்டு இருக்கிற 65 வயது இளைஞன்.
  சுப்ரமணியன்
  துபாய்

 3. Devika Kulasekaran சொல்கிறார்:

  YELLAM NALLA IRUKKU AANAAL ANDHA KADHAIKU SOODIYA POO SOODARKKA ENRA THALAIPPU YAEN ENRU PURIYAVILLAI. YAARAVADHU THAELIVU PADUTHTHAVUM

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s