நாஞ்சில் விழாவிலிருந்து… கிரி

பேசுகிறேன்

எனினும் நான் சிலாகித்த சில விஷயங்களை சின்னஞ்சிறு சொற்களில் கோர்க்க வேண்டுமென்றால்…. 
 தெளிவான ஒரு துவக்கத்தைத் தந்த ராஜகோபாலனின் அட்டகாசப் பேச்சு ஒரு அட்டகாச ஆரம்பம்.நாஞ்சில் குறித்து எஸ்.ரா பேசியது நச்! பாலுமகேந்திரா பகிர்ந்த தகவல்களும், தான் ஏன் தன் “கதை நேர”த்திற்கு நாஞ்சில் கதைகளைத் தேர்தெடுக்கவில்லை என அவர் சொன்னதுவும் விழாவின் மூன்றாவது ஹைலைட். ராஜேந்திரன் அவர்கள் நெகிழ்ந்தது மற்றும் அவர் பேசிய தென் ஆற்காடுத் தமிழ்ப் பேச்சு இரண்டாம் ஹைலைட். விழாவின் முக்கிய ஹைலைட் பேச்சான கண்மணி குணசேகரன் அவர்கள் பற்றி சொல்லாமல் இந்த விழா குறித்து எழுதுதல் ஆகாது. பேச்சல்ல அது….முழக்கம் என்றே சொல்ல வேண்டும். 
 ஞானி பேசியதைவிட நான் ரசித்தது அவர் கண்மணி குணா அவர்கள் பேசுகையில் கவனித்த விதம். ஆழ்ந்து ஊன்றி மூழ்கி அந்தப் பேச்சை கவனித்த அவர் பேசி முடித்து கண்மணி குணசேகரன் அவர்கள் திரும்பி நாற்காலியில் அமர்ந்தபோது அவரை உச்சிமோந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தவறவில்லை.
 முழு கட்டுரையையும் படிக்க:-
http://www.sasariri.com/2011/01/blog-post_05.html

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக