நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் நேரடியானவை.

தங்கமீன் இணைய தளம்: இலக்கிய பதியம் : சுப்ரமணியன் ரமேஷ்
சீக்கிரம் வேலையை விட்டு விட்டு மனதிற்குப் பிடித்ததைச் செய்யவெண்டுமென எழுத்தாளர் ஜெயமோகனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் ஜுராங் பறவைப் பூங்காவில் வைத்து. கேட்டுவிட்டுச் சிரித்தார்.  “இப்படித்தான் அங்க ஒருத்தர் சொல்லிக்கிட்டு திரிஞ்சார். இப்போ ஒய்வு பெற்றும் அதே விற்பனையாளர் வேலையைக் கோவையிலும் செஞ்சிக்கிட்டிருக்கார்.”என்றார் . உடனே ஒரு சகோதர வாஞ்சை ஏற்பட்டுப் போனது, நாஞ்சில் நாடன் மீது! சாப்பிடப் போகையில் விழிப்புணர்ச்சி குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நாஞ்சில் நாடனின் ருசியையும், படைப்பில் அவை வெளிப்படும் விதம் குறித்தும் பேசினார்.  நான் அதற்கு முன்னர் அவரது நாவல்களையே வாசித்திருந்தேன். அலைவுறும் வாழ்க்கைச் சித்திரமும், சங்கப்பாடல்களின் மீதான அவரது ஆளுமையும்,  பதிவாகி இருந்தது. பின்னர் சிறுகதைகளை வாசித்தேன்.
  
நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் நேரடியானவை. நேர்மையாய் வாழ முற்படும் ஒருவனின் வலி, அழுகை, கோபம் இவற்றை ஆற்றாமையோடும், எள்ளலோடும் சொல்ல முற்படுபவை. கதைகளின் வடிவமோ, தொனியோ முக்கியமல்ல. கதாபாத்திரங்களின் ஊடாகச் சமூகத்தின் மீதான அறச்சீற்றம் வலிமையோடு வெளிப்படுகிறது நாஞ்சில் நாடனின் சிறுகதைகளில்.       
           நாஞ்சில் நாடனின் கதைகள் பசித்த மனிதர்களைப் பற்றியவை. நுணுக்கமான சமையல் வர்ணனைகள் கொண்டவை. (க.நா.சு,தி.ஜா வரிசையில் வைக்கத்தக்கவர்  – உணவு ரசனையில்!) வலிமை குன்றிய எளிய மனிதர்களின் வாதைகளை வெளிப்படுத்துபவை. கதாபாத்திரங்கள் பேசாவிட்டால் ஆசிரியரே இடைவெட்டிப் பேசும் அளவில் கோபம் கொண்டவை!
மேலும் படிக்க: http://www.thangameen.com/contentdetails.aspx?tid=161

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் நேரடியானவை.

  1. RAMAKRISHNAN சொல்கிறார்:

    DEAR NAANCHIL NADAN SIR,

    Ihave written a post on you in my website . agnikuyil.blogspot.com.If time permit please read and other posts also and give your valuable opinion

    Regards,
    A.Ramakrishnan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s