விகடன்

விகடன் வாசகர்களுக்கு ‘தீதும் நன்றும்’ மூலம் தனது எழுத்துக்களாலும் சிந்தனையாலும் வெகுவாக வசீகரித்த நாஞ்சில் நாடன், தற்போது கிடைத்துள்ள கெளரவம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில்,

“சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியின் பின்னே நீண்ட கால புறக்கணிப்பின் வலி உள்ளது.

தமிழின் நவீன படைப்புலகுக்கு இந்த புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. விருது பரிசீலனைக் குழுவில் நவீன இலக்கியம் குறித்து அறிந்தவர்கள் இடம்பெற்றதன் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

காலம் கடந்த அங்கீகாரம் சகிக்க முடியாதது. சரியான நேரத்தில் சரியான நபருக்கு அங்கீகாரம் கிடைப்பது அவசியம்.

எனக்கு சில மணி நேரத்தில் வந்துள்ள நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்பின் மூலம் நவீன இலக்கியத்தின் மீது வாசகர்கள் கொண்டுள்ள ஆர்வம் புலப்படுகிறது. ஆனால், இந்த பரபரப்பு எனக்குப் புதிது.

காட்சி ஊடகங்களின் தாக்கம் காரணமாக புத்தக வாசிப்பு ஒரு புறம் குறைந்துள்ளது. இணையத்தில் வலைப்பூக்களின் மூலம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட, ஆனால் தமிழ்வழியில் படிக்காத இளைஞர்களிடம் இலக்கியம் அறிமுகம் ஆகி உள்ளதை மறுக்க முடியாது. அந்த அறிமுகம் அச்சிட்ட  புத்தகங்களைத் தேடி வாசிக்கும் அளவுக்கு இளைஞர்களை ஈர்த்துள்ளது.

புத்தக வாசிப்பின் அனுபவத்தை வேறு எந்த வடிவமும் தந்துவிட முடியாது. எனவே, பெற்றோர் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பை அறிமுகம் செய்ய வேண்டும், புத்தகம் எந்தத் தீமையையும் தராது. கடந்த 10, 15 ஆண்டுகளாக தமிழ் படைப்புலகில் வெளியாகும் புத்தகங்கள், விற்பனை, வாசிப்பு பரவலாக அதிகரித்துள்ளது,” என்று கூறியிருக்கிறார், நாஞ்சில் நாடன்.

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s