நல்லவனுக்குப் பல்லக்கென்றால்

நண்பர்களுக்கு விருது கிடைத்தால்
நமக்கு மகிழ்ச்சிதான் – அது
நாடனுக்குக் கிடைக்கும்போதோ
நமக்கும் கிடைத்ததுதான்
கண்பனிக்க மனமினிக்க..
காரணம் புரிகிறது
கடல்முனை வாழும் கன்னியின் சலங்கை
காதில் விழுகிறது!

அல்லவரெல்லாம் அரியணை ஏறி
ஆட்சி செலுத்தும் போது
அத்தனை திசையும் கொள்ளை அடித்து
அடக்கி மிதிக்கும் போது
மல்லர்களெல்லாம் மவுனம் வகித்து
மண்ணைக் கவ்வும் போது
மலினம் தான்தான் தரமெனச் சந்தியில்
மாரைத் தட்டும் போது, ஒரு
நல்லவனுக்குப் பல்லக்கென்றால்
நமக்குச் சிலிர்க்கிறது
நம்பிக்கைக்குத் தெம்பு பிறந்து
நலம் நலமாகிறது!

காரிருள் நேரம் ஆருயிர் காக்கும்
கைவிளக் கெங்கள் நாடன், பொய்க்
கலியில் பெருகும் கயமை இருளின்
கதியைக் கலக்கும் சூடன்!
தேரி லிருக்கும் தெய்வத்தைக் காக்கச்
சிதையை வளர்க்கும் மாடன்!
தெரிந்தவருக்குத் திறந்த நெஞ்சுடன்
தேனாய்ச் சிரிக்கும் பாலன்!

இவனது சினமொரு தவமுனிக் கோலம்
இவன் சிவன் எறிந்த சூலம்!
மின்னம் மினியாய் மிஞ்சிய பண்புக்கு
இவனிதயம் கருவூலம்!
கவலைகள் ஓடும் வீதியிலே இவன்
கனவுகள்தானே பாலம்!
கங்கு விழிகளால் காவல் காக்கும்
கவனம் இவனது சீலம்!

நாட்டை மறந்து தலைகுனிந்தோர்க்கு
நாடன் மனசாட்சி! 
நலம்விழைவோர்க்கு அவனெழுத்தெல்லாம்
நம்பிக்கைக் காட்சி!
சாட்டை சொடுக்கித் தேரைத் துறந்து
சண்டைக்கிவன் வந்தான்!
சமருக் கஞ்சான் சாவுக் கஞ்சான்
சத்திய தர்மத்தான்!

ஏந்துக கோலை! இந்திர வாளை!
இதுயுகம் மாறும் வேளை! நீ
எடுத்து வைத்த அடியொவ்வொன்றும்
இலக்கியத்தின் புதுச்சோலை!
வேந்தே! உனது வெற்றியைப் பாட
விரைந்தனுப்பினாள் வாலை! உன்
வீதியில் உந்தன் நிழலாய்ச் சின்ன
கீதம் இசைப்பதே என்வேலை!

அன்புடன்,
ரமணன்
22.12.2010

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நல்லவனுக்குப் பல்லக்கென்றால்

  1. J.Subramonian சொல்கிறார்:

    Exactly correct.Thankyou Mr.Ramanan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s