இதுவரை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள ஜெயகாந்தன், அசோகமித்ரன் உள்ளிட்ட படைப்பாளிகள் வரிசையில் இடம்பெறும் நாஞ்சில் நாடனை, படைப்புலகம் பாராட்டி மகிழ்கிறது.
கவிஞர் மனுஷ்யபுத்திரன்: கடந்த சில ஆண்டுகளாக சாகித்ய அகடமி விருது பொருத்தமற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்கிற சர்ச்சை நிலவி வந்தது. ஆனால், நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. தன்னுடைய சிறுகதைகள், நாவல்கள் மூலம் ஆழமான மன உணர்வுகளை வெகு நுட்பமாக சித்திரித்தவர். மிக நீண்ட காலமாக, இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வரும் அவருக்கு, இந்த விருது கொடுக்கப்பட்டது எல்லா விதத்திலும் பொருத்தமானது.
எழுத்தாளர் அசோகமித்ரன்: கடந்த 35 ஆண்டுகளாக நாஞ்சில் நாடனை நான் அறிவேன். அவருக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதுக்கு அவர் முழு தகுதியுள்ளவர். சாகித்ய அகடமி விருது பெறுவதற்கென்று சில சட்டதிட்டங்களை வைத்துள்ளனர்; அதன்படி விருது வழங்குகின்றனர். அரசாங்கம் கூட பல சட்ட திட்டங்களை வைத்துள்ளது; இருந்தாலும் தவறு நடக்கத்தான் செய்கிறது. எனக்கு 66வது வயதில் சாகித்ய அகடமி விருது கிடைத்தது. இதைக் கேட்ட பல பேர், “இவருக்கு இப்பத்தான் கொடுக்கிறார்களா?’ என்று கேட்டனர். 50 நூல்கள் எழுதி முடித்த பின், இது போன்ற விருது கொடுக்கப்பட்டால், அதன் மூலம் என்ன புதிய உத்வேகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?
எழுத்தாளர் பிரபஞ்சன்: விருதுகள் என்பது படைப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு வகை சமூக அடையாளம். கடந்த காலத்தில், தகுதியுள்ள பல படைப்பாளிகள் விருது பெறாமலே மறைந்து போய்விட்டனர். தகுதியுள்ளவர்கள் பரிசு பெறாததும், தகுதியற்றவர்கள் பரிசு பெறுவதும் ஒரு சமூகத்தின் ஆன்ம வீழ்ச்சியாக கருதப்படும். அந்த வகையில், தகுதியான எழுத்தாளரான நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது.
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி: நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகடமி விருது கிடைத்திருப்பதில், உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எழுதத் துவங்கிய காலத்திலேயே, “தலைகீழ் விகிதங்கள்’ என்ற மிகச்சிறந்த நாவலைத் தந்தவர் நாஞ்சில் நாடன். காலந்தாழ்ந்து கிடைத்தாலும், இந்த விருதுக்கு தகுதியுள்ள படைப்பாளி இவர்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்: ஒரு எழுத்தாளர் கவுரவிக்கப்படும் போது, அவரோடு அவர் எழுதிய வாழ்க்கையும், அதைச் சார்ந்த மக்களும் கவுரவிக்கப்படுவதாக நினைக்கிறேன். சிறந்த இலக்கியவாதிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. அவருக்கு என் வாழ்த்துக்கள்
unmayil peruthttha santhosam. sakithya acadamy choose now correct person.
தமிழகத்தின் முக்கியப்படைப்பாளிக்ளில் மிக முக்கிய படைப்பை தந்துள்ளதாக அறிகிறேன். வாழ்த்துச்சொல்ல வேண்டுமென்று என் மனசு துடித்தது. அவர் எழுத்தை படிக்கவில்லையே எனக்குள் அரும்பிவரும் படைப்பாளன் யோசிக்கிறான். ‘இயற்கையை ரசிக்க பர்வைக்கு தடைபோடமுடியுமா என்ன.’உங்கள் வலைதளத்தில் படித்த ஒருசில கதைகளின் அறிமுகம் இருக்கிறது என்ற அடிப்படையில். வணங்குகின்றேன். விருது பெற்றமைக்கு நாங்கள் விருந்துண்டு மகிழ்கின்றோம். வாழ்த்துக்கள் அய்யா.
உங்களை வாழ்த்தும் தகுதி எனக்கு இல்லை தலை வணங்குகிறேன்
தில்லியில் நடந்த கருத்தரங்கில் தங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
தங்களின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது.
தங்களுக்கு விருது கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி .
தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.
நாராயணசாமி.ம
புது தில்லி
Really more deserving person to get this award.I am regularly reading his works.My best wishes
Angappan