நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது   http://pitchaipathiram.blogspot.com/2010/12/blog-post_20.html

தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.

ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு  இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.

செல்வேந்திரன் http://selventhiran.blogspot.com/2010/12/blog-post_20.html

நாஞ்சில் நாட்டு வாழ்வியலை எழுத்தில் வடித்த அசலான கலைஞனும், மூக்கின் நூனியில் ஆத்திரம் சுமக்கின்ற கோபக்கார இளைஞனும், எங்கள் கும்பமுனியுமான எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்க்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் அவரது எழுத்துக்களையும் நேசிக்கிற வாசகனாக எனக்கு மகிழ்வான தருணம் இது. சொந்த தகப்பனுக்குக் கிடைத்த மரியாதையாகவே என் மனம் துள்ளுகிறது. இது கொண்டாட்டமான தருணம். நான் கொண்டாடக் கிளம்புகிறேன்…

 
”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..)இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக  தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு செய்யப்படிருக்கிறது. என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமான படைப்பளி. இவரின் கதைகளில் இருக்கும் வாழ்க்கை என் சொந்த வாழ்க்கையோடு சில சமயங்களில் மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளதால்.. எப்போதும் என்னால் மறக்கமுடியாதபடைப்பாளி இவர்.தன்னுடைய முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள் வெளிவந்த அனுபவத்தை புத்தகம் பேசுகிறது மாத இதழில் அவர் பகிர்ந்துகொண்டது. இங்கே. அனேகமாக அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், 32 ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.அச்சு அசலான எழுத்தும் அவருடையது என்று அவரது நூல்களை வாசித்த எவரும் மறுக்க மாட்டார்கள். மெல்லிய நகைச்சுவைகளை அவருடைய புனைவுகளில் பார்க்கலாம். அதே சமயம் புனைவற்றவைகளில் இவருடைய நகைச்சுவையுணர்வு கரைபுரண்டு ஓடும்.நான் முதலில் இவரது கதைகளை பேய்க்கொட்டு என்ற சிறுகதை தொகுதி வாயிலாகவே முதலில் அறிமுகமானது. அப்புறம் மும்பை போன சமயத்தில் எட்டுதிக்கும் மதயானை நாவல் படித்து கிறங்கிப்போய் இருந்த சமயத்தில் தான்,  எழுத்தாளர் அம்பை வீட்டில் இருந்து வாங்கிச்சென்ற நாவல் தான் தலைகீழ் விகிதங்கள். மும்பையில் இருந்த சமயங்களில் அம்பையிடமிருந்து நிறைய நூல்களை வாசிக்க வாங்கிச்செல்வது வழக்கமாயிருந்தது (அப்போதைய பொருளாதார சூழல் நூல்களை காசுகொடுத்து வாங்கும் நிலையில் இல்லை).மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு போகும் போது, அங்கே நாஞ்சில்நாடன், ஞான.ராஜசேகரன், கலைக்கூத்தன் போன்றோரின் செயல்பாடுகள் குறித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வார் தமிழ்ச்சங்கத்தின் துணைச்செயலாளர் சங்கொலி பாலகிருஷ்ணன் என்பவர். இவரும் சிறுகதையாளர் தான். நானும் நண்பர் மதியும் குயில்தோப்பு சிற்றிதழை தொடங்கியபோது, இவரது முகவரியைத்தான் இதழில் தொடர்ப்பு முகவரியாக கொடுத்திருந்தோம். கம்பராமாயணத்தில் அதன் சுவைக்காக மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்திருக்கிறார் நாஞ்சில்நாடன்.நேரடியாக இணையத்தில் நாஞ்சில்நாடன் இயங்காவிட்டாலும் இவரது வாசகர் சுல்தான் என்பவரால் இவரது எழுத்துக்கள் வலையேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வலைப்பதிவின் முகவரி: https://nanjilnadan.wordpress.comஒவ்வொரு முறையும் இவ்விருது வழங்கப்படும் போது இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை எழும். அது இம்முறை இருக்காது என்று நம்புகிறேன். இவ்விருதுக்கு சரியானநபரை இம்முறை அகாதமி தேர்வு செய்திருப்பதாக நம்புகிறேன்.

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான எழுத்துக்கு சொந்தக்காரரான நாஞ்சில்நாடனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். சிறிது நேரத்துக்கு முன் அவருக்கு தொலைபேசி வழி வாழ்த்து சொல்ல முயன்றபோது, அவரது எண் தொடர்ந்து பிசியாக இருந்துகொண்டே இருந்த்து. அப்படியும் விடாப்பிடியாக முயற்சித்து வாழ்த்துகளை சொல்லிவிட்டேன்.

பா. ராகவன் 

கொண்டாட ஒரு தருணம் 
 http://www.writerpara.com/paper/?p=1735
நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள்.தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா? நாஞ்சிலின் கதைகள் எனக்கு அப்படியானவற்றுள் ஒன்று. எளிமையும் நேரடித்தன்மையும் உண்மையும் மிக்கவை அவருடைய எழுத்துகள். யதார்த்தவாதக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்று இலக்கிய உலகின் ஈசான மூலையில் இருந்து எப்போதும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். கதவிடுக்குப் பல்லியின் குரல் அது. நாஞ்சிலின் கதைகள் யதார்த்தத்தின் அச்சிலிருந்து இம்மியும் பிறழாதவை. அழுத்தந்திருத்தமாக இந்த மண்ணில் கால் பதித்து கம்பீரமாக எழுந்து நிற்கும் கதைகள்.ஒரு தினத்தந்தி வாசகன் முயற்சி செய்தால்கூட அவரது கதையுலகில் எளிதில் நுழைய முடியும். ரசிக்க முடியும். வியக்கவும் பகிரவும் அனுபவிக்கவும் முடியும். சிறந்த இலக்கியங்கள் அனைத்துக்குமான பொது இயல்பு இது. ஆனால் தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களுக்கும் சிற்றிதழ் வாசகர்களுக்கும் மட்டுமே இன்று இந்தத் தருணத்தின் அருமை புரியும்.நாஞ்சிலின் பிழை அல்ல இது. நமது பிழை.சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குகிறது. இதுநாள் வரை நாஞ்சில் நாடனை வாசிக்காத வாசகர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம். அவருடைய பெரும்பாலான (அனைத்து?) புத்தகங்கள் விஜயா பதிப்பக அரங்கில் கிடைக்கும். தமிழினி ஸ்டாலில் சமயத்தில் நாஞ்சிலே கிடைப்பார்!NHM வெளியிட்டுள்ள நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை – நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே.
இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.

70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் ‘தலைகீழ் விகிதங்கள்’ போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.

நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற சுட்டிகள்:நாஞ்சில்நாடன் விக்கியில் : http://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_நாடன்
 

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

 1. ஜெயக்குமார் சொல்கிறார்:

  http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/12/blog-post.html

  எனது மகிழ்ச்சி இங்கே பதிவாக

 2. சென்ஷி சொல்கிறார்:

  🙂

  மகிழ்வான தருணம் சுல்தான் ஜி…. பகிரத்தந்தமைக்கு நன்றிகள் பலப்பல…

 3. பாரத் சொல்கிறார்:

  நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வாழ்த்துக்களும், வந்தனங்களும்
  //விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி…
  //

 4. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  நாஞ்சில் நாடன் அவர்களை மிக சமீபத்தில் தான் படிக்க ஆரம்பித்தேன் ,படிக்க படிக்க இவரை எப்படி இவ்வளவு நாள் படிக்காமல் விட்டோம் என ஆச்சரியப்பட வைத்தது அவரது அழகும் ,துடிப்பும் கலந்த தமிழ்-ஒரு உண்மையான படைப்பாளிக்கு விருதுகள் பெரிதல்ல,ஆனாலும் விருதுகள் பெருமை கொள்ள இவரை போன்றவர்களுக்கு கொடுக்கத்தான் வேண்டியுள்ளது,வாழ்த்துகள்!

 5. sureshkumar சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.

 6. kaja சொல்கிறார்:

  i am very happy to this moment. congrats nanjil sir.

 7. டைனோ சொல்கிறார்:

  வாழ்த்துகள் நாஞ்சில் நாடன்!

 8. Devarajan சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சி நாஞ்சில் அய்யா..!!

 9. bharathidevaraj சொல்கிறார்:

  Dear Naanjil Sir,
  I am very glad for this award. Many more happy returns of the day.
  Thankyou
  bharathidevaraj cell 7708840476

 10. டேவி சாம் ஆசீர் சொல்கிறார்:

  ஐயா.
  மகிழ்கிறேன்.

 11. பரக்கத் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நாஞ்சிலாரே! உண்மையான, நேர்மையான ஒரு எழுத்தாளருக்கு கொடுத்திருப்பது சாகித்ய அகாடமிக்கே பெருமை!

 12. Moosa சொல்கிறார்:

  வாழ்த்துகள்….

 13. M.Sigappi சொல்கிறார்:

  congrats sir! it is really a great news.

 14. Sathyakumar சொல்கிறார்:

  I am extremely glad to know this sir.

 15. பழ. கந்தசாமி சொல்கிறார்:

  சாகித்திய அகாடமி விருது பெற்றமைக்காக நாஞ்சில் நாடன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்காக வலைப்பூ நடத்தி அவரின் எழுத்துகளை வாசிக்க வாய்ப்பளித்துவரும் சுல்தான் அவர்களுக்கு நன்றி.

  மகிழ்ச்சியுடன்.
  பழ. கந்தசாமி

 16. ramanathan.m சொல்கிறார்:

  nanjil nadan is a right person , he is not only good writer,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s