சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் மூலமாகச் சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன். இன்றும் குப்பைத் தொட்டியில் எச்சில் வழிக்கும் எவரைக் கண்டாலும் தொண்டை அடைக்கிறது.
பந்தியில் இருந்து எழுப்பிவிட்ட எவரும் மேல் சாதிக்காரர்கள் அல்ல. அயலூர்க்காரர்கள் அல்ல. செல்வச் செழிப்புள்ள பண்ணையார்களும் அல்ல. இன்றும் அவர்களைக் காணும்போது எரிச்சல் பிறக்கிறது. இரக்கமும் தோன்றுகிறது. ஆனால் எனக்குள் எழும் கேள்விகள் படைப்புத்தடம் பிடிக்கின்றன.
எனது வீட்டின் ஒளியற்ற சூழல், படித்த போதும், படித்துவிட்டு வேலைக்கு அலைந்தபோதும் சந்தித்த நட்பற்ற முகங்கள், எல்லாம் எனக்குக் கற்பித்தவை ஏராளம்.
“பீஸ் கட்ட வக்கு இல்லேண்ணா எதுக்குலே படிக்கணும்?”
“குடிக்கக் கஞ்சி இல்லே, குண்டிக்குத் துணியில்லே, ஆனா கெவுரவத்துக்குக் குறைவில்லே பாரேன்.”
கொடுக்கென்பது தேளின் ஆயுதம் மட்டும் அல்ல என்று வாழ்க்கை எனக்குக் கற்பித்தது.
(”நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று” எனும் கட்டுரை தொகுப்பில், ”எனது படைப்புலகம்” எனும் கட்டுரையில் நாஞ்சில்நாடன்.)
தட்டச்சு உதவி: சென்ஷி http://senshe.blogspot.com/ .. senshe.indian@gmail.com
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
கிடைக்குமிடம்;
தமிழினி,
67, பீட்டர்ஸ் சாலை,
ராயாப்பேட்டை, சென்னை..6000014
தொலைபேசி: +91-9884196552, +91-9884196552
xxxxxxxxxxxxx
உடுமலை.காம்
how can iread full artcle?-vidyashankar
நாஞ்சிலின் அனுபவத்தை நானும் என் இளமையில் அனுபவித்த அனுபவம் உண்டு, எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கும்???
முழு கட்டுரையும் விரைவில் வரும்
உங்களுடைய பதிவு காத்திருக்கிறேன்
பழயதை மறவாத மனம் என்றும் வீழாது வாழ்த்துக்கல் நா
ஞ்சில் நாடன்