கும்பமுனி

 கும்பமுனி

நான்ஞில் நாடன் பற்றி ஜெயமோகன் வலைதளத்தில் http://jeyamohan.in பார்த்து இருக்கிறேன், விகடனில் அவர் பேட்டி படித்தது உண்டு.
போன வாரம் பழைய சாமான் வித்ததில் ஒரு 500 ருபாய் வருமானம். ஆகா தமிழ் புத்தகம் வாங்கலாம் என்று New century Book Shop சென்ற போது பிராந்து புத்தகம் கண்ணில் பட்டது. விஷ்ணுபுரம் வாங்குவதாக தான் உத்தேசம், ஜெயமோகன் செய்த புண்ணியம், book out of stock, அது மட்டும் கிடைத்திருந்தால் நம்ம blogல அதுக்கு ஒரு விமர்ச்சனம் கண்டிப்பாக.
இன்னும் முழுசாக கூட படிக்கல, விமர்சனம் எழுதும் ஆவல் பொத்துகிட்டு வந்ததால், இந்த உரை.
படித்த ஐந்து கதைகளில், கும்பமுனி நிறைந்து நிற்கிறார். நம்ம எல்லாரும் ஒரு விதத்தில் கும்பமுனி தான். நம்மால முடிந்த அளவு வாழ்கையோட முட்டி மோதி முன்னேற பார்கிறோம். திரவியம் போதுமான அளவு சேர்த்தவன், அதை மேலும் பெருக்குவதிலே குறியாக இருந்து வாழ்கையின் மற்ற aspectஅ தொலைத்து விடுகிறான். சுத்தமாக தோற்பவன் ஒன்று ஞானி ஆகிறான், இல்லை எதாவது சமுதாய தொல்லையை அவனால் முடிந்த அளவு குடுக்கிறான். நம்மள மாதிரி நடுவுல மாட்டி அல்லாடறவன் தான் உண்மையான 21ஆம் நூற்றாண்டு specimen கும்பமுனி.
எதையும் ஒரு கேலியோடு பார்ப்பது தான் கும்பமுனியோட speciality. அவர் வாழ்ந்து முடிந்தாகி விட்டது, காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது, அந்த சமயத்தில் ஒரு அரசாங்க விருது, அதனால் ஒரு தனியார் தொலைகாட்சியில் நேர்கானல், நம்ம வைரமுத்து அய்யா இந்த மாதிரி சந்தர்ப்பத்தை விடவே மாட்டார். நல்ல ஒரு சில்க் ஜிப்பாவாக போட்டுகொண்டு, படிய வாரிய தலையோடு, இமைகளை மேலே செருகி கொண்டு, நேர்காணல் செய்ய வருபவரை வறுக்க தயாராகி விடுவார். பா.விஜய் ஒரு படி மேலே போய் விருதை கலைஞர் கையால் வாங்குவதற்கு தன் செலவிலே ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து, தன்க்கு தானே கலைஞர் கையால் வீர வாள் பரிச்ளித்துக்கொள்வார். கண்டிப்பாக ஒரு கவியரங்கம், கலைஞர் தலைமையில் உண்டு.
கும்பமுனிக்கு காலம் போன காலத்தில் வந்த recognition comedyஅக இருக்கு. வாழ்கைய விலகி நின்று பார்க்க தெரிந்தவருக்கு தான் வாழ்கை பரிகாசமாக தெரியும், மற்றவருக்கு வாழ்கை நம்மை பார்த்து பரிகாசம் செய்வது போல தோண்றும்.
ஒளிபதிவாளருக்கு ஆசாத் ஓட்டல் கொத்து புரோட்டா நினைப்பு, பேட்டியாளருக்கு எப்படியாவது sensation கொண்டு வர வேண்டும் என்று துடிப்பு, சமையல்காரருக்கு சீக்கிரம் சோறு பொங்கி விட வேண்டும் என்ற அவசரம், கும்பமுனிக்கோ எல்லாமே வேடிக்கை. தன்னை சுற்றி நடப்பதை ஒரு நாடகம், தாமும் அதில் ஒரு பாத்திரம் என்ற தெளிவு அவரிடம் உள்ளது.
பேட்டி எடுப்பவர் – இள வயது ஆனால் youngster இல்லை, செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்,மற்றவர் தம் வேலையை பாரட்ட வேண்டும் என்பதற்காகவே வேலை செய்பவர். சின்ன சின்ன வெற்றியில் சந்தோஷம் காண்பவர்.
சமையல்காரர் – வேலையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் உள்ளவர். பாராட்டும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம், எப்படா வேலையை முடித்து அக்கடானு படுக்கலாம் என்ற மன நிலையில் உள்ளவர்.
கும்பமுனி – அனைத்தையும் கடந்தவர், வாழ்கையை பார்த்து எள்ளி நகைப்பவர்

http://tamilkirukal.blogspot.com/2008/04/blog-post.html

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s