குறிச்சொல் தொகுப்புகள்: naanjilnadan

தெய்வத்தான் ஆகாது எனினும்…

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கம்பனுக்குள் வந்த கதை (2)

This gallery contains 8 photos.

ஜெயமோகன் தமிழுக்கு வாய்த்த அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். இதை நான் ஆயிரம் கோயிலில் சொல்லுவேன். ஏழெட்டு ஆண்டுகளாக ஊட்டி மலைகளில்  மஞ்சண கொரே கிராமத்தில் இருக்கும் ஶ்ரீ நாராயண குருகுலத்தில் அவர் ஏற்பாட்டில் இலக்கிய முகாம்கள் ஏற்பாடு செய்கிறார். எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துகொண்டு இருக்கிறேன்…..நாஞ்சில் நாடன்             … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கனடாவில் நாஞ்சில் .. புகைப்படங்கள்.2

This gallery contains 14 photos.

அனைத்து புகைப்படங்களையும் காண: https://picasaweb.google.com/109094758044592670996/NanjilTrip?authkey=Gv1sRgCKiDm9iy-J7JPA&feat=email

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

You are invited to view Anand Unnat’s photo album: Nanjil Trip, Canada

This gallery contains 23 photos.

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கம்பனின் அம்பறாத் தூணி

This gallery contains 3 photos.

என்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன். இது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம். அது எனக்குப் பொருட்டில்லை. எனது இலக்கு, கம்பனைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து… … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறுவர் செடி வளர்ப்போம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் இன்று  ஒன்று நன்று!  (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! நாஞ்சில் நாடன் பேசுகிறேன் ! கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள்.  சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை,  அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துன்னல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 1323 நாட்கள் இருந்தன இடையில் வரும் லீப் வருடத்தின் அதிகப்பிரசங்க நாளையும் சேர்த்து இதில் 205 ஞாயிறுகள், 99 இரண்டாம் – நான்காம் சனிக்கிழமைகள், வழங்கப்படும் 36 பொது விடுமுறைகள், எடுத்துக் கிழிக்க வேண்டிய 35 மருத்துவ விடுப்புகள், 24 சில்லறை விடுப்புகள், கையிருப்பான 53 நாட்கள் உரிமை விடுப்புடன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

The Iyal Award

This gallery contains 2 photos.

Tamil writer Nanjil Nadan, who captured the life and culture of the people of Nanjil Nadu, the ancient Tamil region in Kanyakumari district, has been selected for The Iyal Award instituted by a Canada-based Tamil Literary Garden. The award to … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலுக்கு இயல் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்

This gallery contains 4 photos.

வீரக்குமார்…ஈரோடு சிவகிரி http://www.veerawritings.blogspot.in/2012/11/blog-post_1374.html வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை  உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன். கன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல நகர்ந்தேன். வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும்சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள். வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார். – … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெருந்தவம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்