Category Archives: நாஞ்சில்நாடனின் கவிதைகள்

காதல் போயின், காதல் போயின்….

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் . . இனிது காதலி திருமுகம் காண்டல் இனிது காதலி மென்சொல் கேட்டல் இனிது காதலி குறுஞ்செய்தி பார்த்தல் இனிது காதலி எண்ணி இருத்தல் இனிது காதலி கனவில் தோன்றல் இனிது காதலி மெய்ப்புறம் தீண்டல் இனிது காதலி வாய்ச்சுவை அறிதல் இனிது காதலி முலைதலை சாய்த்தல் இனிது காதலி அல்குல் தைவரல் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

மானுடம்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன்   ஆணாய் பெண்ணாய் அலியாய் இருத்தல் இருதுடை நடுவின் இயல்பு என்பதோர் நேர்தல் எனின் ஆணாய் பெண்ணாய் அலியாய் வாழ்தல் நேர்தல் அல்ல மானுடம் என்பது நேர்தலில் இல்லை வாழ்தலில் துளிர்க்கும் பசிய சிறுபுல் மாடு கடிக்கும் காய்ந்தும் கிடக்கும் கவிந்து வளர்ந்து மண்ணும் மூடும் …………………………………………………………………… …………………………………….”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு.. … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

ஞானோபதேசம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் பொய்யின் மொழி பேசு தாயின் கோயிலில் திருடு பேரிளம் பெண்ணையும் கற்பழி சகமனித உதிரம் உறிஞ்சு பிள்ளைக்கறி சமைத்துண் பொன்னும் பொருளும் கொணரா மருமகளைக் கருக்கு கொலைத் தொழில் பழகு உயிர் மருந்தில் ஊழல் செய் செய்க பொருள் வையத் தலைமை கொள் வாழ்வாங்கு வாழ்வாய் காண் ……………………………………………………………………. …………………………………………………..”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு

More Galleries | | மறுமொழியவும்

காமம், காமம் என்ப…

This gallery contains 1 photo.

. . நாஞ்சில் நாடன் . காரைக்கால் அம்மையின் தடத்தில் நடக்கப் பேயுருவல்ல நம்முரு பன்னாட்டுப் பித்துரு  . காமம் கனிந்தது அம்மை தேடல் காமம் நனைந்தது நமது நாடல்  . காமம் என்பது செம்பியன் ஏற்றை கருமுக மந்தி இன்று நமக்கு  . பொருந்தாக் காமம் போதாக் காமம் திருந்தாக் காமம் தீவிரக் காமம்- … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

வ(வி)சன கவிதை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பேருந்து நிலையமெலாம் திரை எழும்பும் கூலியினம் . இடுப்பில் ஒன்றெனில் கைவிரல் மடிப்பில் மற்றொன்று தலையில் சுமடமர்ந்த பயணப் பொருள் மூட்டை . தெற்கின் சக உதிரம் தெங்கெண்ணெய்த் தலையொழுக ஊர் பார்த்து வழியேகும் . உமையாளின் மணநாளில் தேவர் கனம் சமன் செய்ய தெற்கே வழி மறந்த குடமுனியும் வடக்கேகும் . … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

கால முதல்வன்

This gallery contains 1 photo.

பொருட்டின்றிக் கடந்து போயிற்று தொடர்ந்தேகினேன் தொலையாத் தூரம் காலத்தைத் தாண்டுதல் சாலுமாவெனப் பொருள் விடிந்தபோது பொருட்டற்றுப் போயிற்று எனக்கும் எனினும் பின்னால் தொடர்ந்தோடி வருகுவதென் கால முதல்வனே! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நாஞ்சில்நாடன்  ஓவியம்: ஜீவா தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

More Galleries | | 2 மறுமொழிகள்

மொழியும் சைகையும்

This gallery contains 1 photo.

உள்ளும் புறமும் கரிய வராக நிறம் அதிகாரம் பணம் பதவி கண்ட வாலின் சுழி இனக்குணம் வறண்ட மலம் Staple Fiber food  . குறிஞ்சி கருங்குவளை நீலம் சங்குபுட்பம் நீலாம்பல் கருநொச்சி கருந்துளசி நீலஊமத்தை எனக் கபிலன் குறித்த , குறிக்க மறந்துபோன யாவும் சட்டியில் வளரும் குரோட்டன்  . அருங்காட்சியகங்களில் உருவம் நட்டு … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

தன்னிரக்கப் பா

This gallery contains 1 photo.

நடந்த தடமெல்லாம் தேடிக் களைக்கிறேன் உலர்ந்த பூச்சரம் உதிர்ந்த கொலுசுமணி களைந்த கேசச்சுருள் வெட்டிய நகப்பிறை காட்சிப் படாதாவென  . காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்த நோய் இரவு ஏன் ஈட்டியால் எறிகிறது  . உற்றாரை வேண்டாது ஊராரும் சாராது கற்றாரைக் காணாது கற்றனவும் முன்மறந்து பொற்பாதம் தேடிப் பூமுகமும் காணாமல் வெற்றாரென … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

கொய்தல்

This gallery contains 1 photo.

பறவை எச்சமோ விலங்கினக் கழிவோ விதையொன்று வீழ்ந்தது கிடந்தது விதைத்துயில் கொண்டு முளைப்பதும் முளையாதிருப்பதும் அதனதன் முனைப்பு முளைத்தது வெள்ளாடு களைக்கொட்டு கவாத்து துணிந்து எறியாதிருந்தது நல்லூழ் அந்தரங்கத்தில் கனவொன்றிருந்தது கிளை கொடி வீசிப்படர்ந்து காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்தது வனப்பு வடிவு வண்ணம் என்பன வசத்தில் இல்லை வாசம் என்பதோர் நல்வினை … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

அடையாளம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அடையாளம் போன பிறப்பில் வாயிலோன் மிதித்து ஏறிய கற்படி வளர்த்த பார்ப்பு அணிந்து கழற்றிய ஆடை கொங்கை முன்றில் எழுதிய குங்குமம் அற்ற நீர்க் குளத்து அறுநீர்ப் பறவை . வரும் பிறவியில் ஒக்கலைப் பிள்ளை புறம் நின்று புல்லும் கொழுநன் உட்தொடையில் உராயும் மச்சம் உண்ணீர்க் குளத்துக் கொட்டியும் ஆம்பலும் இந்த … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

புளிக்கும் அப்பழம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் உலக நாடுகள் காணுதல் என்றால் அருவி , புல்வெளி , கானகம் , வாகனம் , ஓவியம் , சிற்பம் , படகுச் சவாரி , பனிச்சறுக்கு , வெந்நீர் ஊற்று , உறங்கும் எரிமலை , வண்ணக் கடற்புறம் , கவினுறு தீவு , வடிவும் வனப்பும் கொண்ட கைகளின் அமுக்குதல் … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

சாக்கோட்டை

This gallery contains 2 photos.

சுடலை நோக்கிய என் வழித்தடத்தில் செங்கொன்றையாய் நேசம் பூத்துச் சொரியும் சாக்கோட்டைக்கு இன்னும் சில அடியீடு மட்டும் வாழும் ஆசையோ வானினும் உயர்ந்தன்று எனினும் இனித் திரும்ப ஒண்ணாது அலை ஓயவும் மாட்டாது. ……………………………………………………………………நாஞ்சில்நாடன்

More Galleries | | 1 மறுமொழி

விரகம்

This gallery contains 1 photo.

(இன்னொரு முத்தொள்ளாயிரப் பாடலின் எதிரான மனநிலை எனக்கு,       ‘கூடற் பெருமானைக் கூடலாற் கோமானைக்       கூடப் பெறுவனேல் கூடென்று – கூடல்       இழைப்பாற்போல் காட்டி இழையா நிற்கும்      பிழைப்பிற் பிழைப்பாக்கு அறிந்து’      ஏனெனில் தமிழ்மொழி நேற்றுப் பிறந்த மொழியல்ல, இன்று புதிதாக வந்த நான் சின்னச் சாதனையில் கொடி நாட்டிவிட்டுப் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

சிறுதெய்வம்

This gallery contains 1 photo.

நினைப்பதை விரும்புவதைப் பேசயிலாத, மந்திரத்தில் கட்டுண்ட சிறு தெய்வம் யாம் பெயர் சுடலை மாடன் , கழுமாடன் , புலைமாடன் யாதெனில் என்? உறுமல் , குமுறல் , சைகை நயனத்து அசைவு  ,நடமிடும் காற்சுவடு எம் மொழி கூக்குரல் எம் சிலிர்ப்பு ஊளை எம் கானம் உன் குலக் காவல் எம் தொழில் நீ … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

அறமா மறமா?

This gallery contains 1 photo.

தோளின் கிளி பறந்த மீனாட்சி கொண்டை அவிழ அலையாய் அளகம் சரிந்த நாச்சி பொற்கிண்ணப் பால் வார்த்து ஞானப்பசி கிளத்திய உமையாள் தாம்பூலம் உமிழ்ந்து கவிக்கண் திறந்த காளி தவழ்ந்தும் உருண்டும் பனிமலை எய்திய ஆதிசிவன் அம்மை கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது காமத் தீம்பால் மண்ணுக்குப் பாயும் மாயம் ஆய்ந்த வெள்ளி வீதி கால் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்