Category Archives: எண்ணும் எழுத்தும்

நாய் பெற்ற தெங்கம் பழம் (முழுக் கட்டுரை)

This gallery contains 14 photos.

பத்து ஆண்டுகள் கூட வாழும் தகுதியற்ற நாவல்களில் சிறுகதைகளில் கவிதைகளில் இங்கு முனைவர்ப் பட்ட ஆய்வுகள் மாய்ந்து மாய்ந்து நடந்துகொண்டிருக்கின்றன, சாதி பார்த்து, மதம் கணித்து, அரசியல் சார்புகள் ஆய்ந்து இவர்கள் எதைத்தேடி எதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? எனக்கு வியப்பு ஏற்படுவதுண்டு, எனது எழுத்துக்களில் இதுவரை பத்து டாக்டர் பட்டங்கள் எனும்போது அம்மணக்குண்டியாக ஆற்றுப்பாலத்தில் ஓடலாம் … Continue reading

More Galleries | | 5 மறுமொழிகள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி

This gallery contains 9 photos.

எந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா? மனிதனுக்காகவா? அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன் முன்பகுதி:  ”துருப்பிடித்த … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=16827 நாஞ்சில்நாடன்  மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன். குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன் வடர்ப் புல்லை கரும்போரான் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

This gallery contains 1 photo.

solvanam.com/ நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகளை இங்கே படிக்கலாம் : பாகம் – 1 | பாகம் – 2      பள்ளும் குறமும்   பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை ‘விருந்து” எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.   விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே,  என்பது தொல்காப்பியம், … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – தூது

This gallery contains 3 photos.

  நாஞ்சில் நாடன் தூது கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது. திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன. அன்புடைமை, … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

மொழி என்னும் அரண்- தொடர்ச்சி

This gallery contains 18 photos.

‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழுஉச் சொல் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை’ என நன்னூல் கூறும் பத்து குற்றங்களில் பலவும் ஏற்கனவே   நான் செய்தாயிற்று. அத்துடன் இதுவும் ஒன்று நாஞ்சில் நாடன் முன் பகுதி: மொழி … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

பஞ்சம் 1.2

This gallery contains 13 photos.

‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி       அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி       அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்       அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1 

More Galleries | | 1 மறுமொழி

பஞ்சம் 1.1

This gallery contains 12 photos.

 நாஞ்சிலார் அகல வாசிப்பு, அபார நினைவாற்றல். தமிழுக்கு என்றும் குறைவில்லை……… (கணபதி அண்ணன்) (கவிஞர் திருவேந்தி) சமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை. கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

பஞ்சம்

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம் பஞ்சம் என்பது இவண் ஐந்து எனும் பொருளில் ஆளப்படுகிறது.  வறட்சி எனும் பொருளில் அல்ல. 1876-ம் வருடத்துத் தாது வருடப் பஞ்சம்’ பற்றிப் பின்னாளில் நகை பொங்க எழுதப்பட்ட ‘பஞ்ச லட்சண திருமுக விலாசம்’ எனும் நூலை ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

சூரல் பம்பிய சிறு கான் யாறு

This gallery contains 13 photos.

தலைப்பே வெகுவான கிளர்ச்சியை ஏற்படுத்துவது. சங்க இலக்கிய வரியோ எனும் மயக்கம். சூரல் எனில் மூங்கிலில் ஒரு வகை. பம்பிய எனில் அடர்ந்த, செறிந்த, நெருங்கிய, பின்னிப் படர்ந்த. சிறு கான் யாறு எனில் சிறிய காட்டாறு. தொகுப்பின் ஆசிரியர், எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங், அந்த வரி எங்கு வருகிறது என இன்னும் தேடிக் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

அறுமுகம்

  நாஞ்சில் நாடன் அட்டம், சப்தம் என்பனவற்றின் தொடர்ச்சியாக எழுதப்பெறும் கட்டுரை என்பதை  நீங்கள் அறிவீர்கள். உண்மையில் சஷ்டி எனத் தலைப்பு வைத்திருக்கலாம்.      அல்லது அதன் தமிழ் வடிவமாக சட்டி என்று. சட்டி என்பதை மண்சட்டி, கற்சட்டி, இரும்புச் சட்டி எனப் பொருள் கொள மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஸ,ஷ,ஜ,க்ஷ,ஹ, ஸ்ரீ என்று தமிழன் கண்டுபிடித்த … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 மறுமொழி

ஙப்போல் வளை ஞமலி போல் வாழேல்

 நாஞ்சில் நாடன்  ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும்.                                ‘ங’ எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என.            மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான ‘ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 மறுமொழிகள்

ஆயுத எழுத்தும் எழுத்தாயுதமும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு, இரண்டும் புணர்ந்த உயிர்மெய் எழுத்தென்ப இருநூற்றுப் பதினாறு. ஆகத் தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தாறு. ஆயுத எழுத்தும் சேர்த்து இருநூற்று நாற்பத்தேழு. இன்று வழக்கொழிந்து  வருகிற ஆயுத எழுத்து ஒரு அத்துமீறலா? அது குறிலா, நெடிலா, ஒற்றா, உயிரா, உயிர்மெய்யா என்பதில் எனக்கின்று தெளிவில்லை. ‘ங’ ப்போல் வளைக்க ஆயுத … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | மறுமொழியவும்

சப்தம்.. தொடர்ச்சி

 ஒரு கணித மாணவன் எனும் விதத்தில் எல்லாஎண்களுமே கவித்துவமானவை எனக்கு. எண்கள்முன், பாவை நோன்பு நோற்கும்  பருவப் பெண் நான். எனக்கு எப்போதும் சொல்மீது காமம் உண்டு. துல்லியமான பொருள் உணர்த்தும் சொற்கள்,இசைத்தன்மை கொண்ட சொற்கள், ஏற்கனவே அறிந்திராத ஆனால் மரபில் கிடக்கும் தொன்மையான‌சொற்கள் எனைக்  கிளத்திக்கொண்டே இருப்பவை.       நாஞ்சில் நாடன் முதல் பகுதி:  சப்தம் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | மறுமொழியவும்