Category Archives: இலக்கியம்

இயல் விருது ஏற்புரை… வீடியோ

Anand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தெய்வத்தான் ஆகாது எனினும்…

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்பறாத் தூணி

This gallery contains 10 photos.

கதைக்கோ, கட்டுரைக்கோ, நாவலுக்கோ தலைப்பு வைப்பதென்பதும் படைப்பாக்கத்தைப் போல முக்கியமானது. உண்மையில் ஒரு நூலில் எந்த உறுப்பும் முக்கியமற்றது அன்று. இது ஒருநாள் கிரிக்கட் போட்டி அல்லி, கடைசி ஓவரில் வைத்து காய்ச்சிவிடலாம் என்பதற்க்கு. எனக்கு ஒரு புத்தகம் என்பது முகப்பில் தொடங்கி முதுகு பின்னட்டை வரைக்கும். இனாமாக கிடைத்த புத்தகம் என்பதால் விலைபார்க்காமல் இருக்க … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பனுக்குள் வந்த கதை (2)

This gallery contains 8 photos.

ஜெயமோகன் தமிழுக்கு வாய்த்த அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். இதை நான் ஆயிரம் கோயிலில் சொல்லுவேன். ஏழெட்டு ஆண்டுகளாக ஊட்டி மலைகளில்  மஞ்சண கொரே கிராமத்தில் இருக்கும் ஶ்ரீ நாராயண குருகுலத்தில் அவர் ஏற்பாட்டில் இலக்கிய முகாம்கள் ஏற்பாடு செய்கிறார். எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துகொண்டு இருக்கிறேன்…..நாஞ்சில் நாடன்             … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பனின் அம்பறாத் தூணி

This gallery contains 3 photos.

என்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன். இது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம். அது எனக்குப் பொருட்டில்லை. எனது இலக்கு, கம்பனைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வந்தான்,வருவான்,வாராநின்றான்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன் ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

துன்னல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 1323 நாட்கள் இருந்தன இடையில் வரும் லீப் வருடத்தின் அதிகப்பிரசங்க நாளையும் சேர்த்து இதில் 205 ஞாயிறுகள், 99 இரண்டாம் – நான்காம் சனிக்கிழமைகள், வழங்கப்படும் 36 பொது விடுமுறைகள், எடுத்துக் கிழிக்க வேண்டிய 35 மருத்துவ விடுப்புகள், 24 சில்லறை விடுப்புகள், கையிருப்பான 53 நாட்கள் உரிமை விடுப்புடன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முரண் தொகை

This gallery contains 8 photos.

நாம் பேசவந்ததே வேறு ! எனது வாசகர் அறிவார்கள் இதை. எம் கதை என்பது பன்னிரண்டு கோர்ஸ் டின்னர் போல. கதை கடைசி கோர்சில்தான் கண்ணுக்குப் புலப்படும்.  இது நம் தடம்……                       ………..நாஞ்சில் நாடன்  

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெருந்தவம்- (முழுக் கதை)

நாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பெருந்தவம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புத்தகங்கள்-இன்று ஒன்று நன்று

This gallery contains 4 photos.

ஒரு மசால்தோசை ஐம்பது ரூபாயும் ஒரு காபி இருபது ரூபாயும் விக்கிற காலத்தில் எண்பது ரூபாய்க்கு புஸ்தகம் வாங்க நாம் என்னமாய் யோசிக்கிறோம்? (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் நாஞ்சில்நாடன் உரையாடியது)                             … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக